நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பில் தேசிய கொடி ஏற்றி, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்கள். நாடு முழுவதும் சுதந்திர தின விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.

1947ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திர தினம் கிடைத்தது. இன்றுடன் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அரவான் மள்ளர் அலங்கார மேடையில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் மற்றும் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையினர் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்களுக்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினர்.

இதனை தொடர்ந்து பேசிய அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையின் தலைவர் மனுநீதி சோழன், 1936 ஆம் ஆண்டு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை பிரிட்டிஷ் அரசினர் எஸ்.சி பட்டியல் பிரிவில் சேர்த்ததாகவும், இதனை திருத்தி அதற்கு முன்பு இருந்த ஒ.பி.சி பட்டியல் பிரிவினிலேயே மீண்டும் தங்கள் சமூகத்தை சேர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுதந்திர தினத்தில் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் முத்துக்குமார்,மனோகரன், தீனா, மகேஷ்,கரிகாலன், மனோஜ்,உத்தமன், மலர்,ஞானவேல், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment