கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 200 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் ஊர்வலங்கள், அஞ்சலி கூட்டங்கள் நடைபெறுகின்றன.

அகில பாரத அனுமன் சேனா அமைப்பினர் குறிச்சியில் அனுமதியின்றி மலரஞ்சலி மற்றும் மோட்ச வழிபாடு செய்ய சென்ற போது போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
அனுமன் சேனா தலைவர் சிட்கோ ராஜேந்திரன் மற்றும் சுரேஸ் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Be First to Comment