அகில பாரத மக்கள் கட்சி சார்பாக சங்கனூர் பள்ளம் பகுதி கருப்புசாமி கோவில் வளாகத்தில் பசி போக்கும் அன்னதான முகாம் நடைபெற்றது.
பசித்தவர்களுக்கு உணவு எனும். நோக்கத்தில் அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் ஏழை தொழிலாளர்கள் குடும்பத்தினர்களுக்கு அவர்களது இருப்பிடத்திற்கே சென்று தினமும் உணவு வழங்கி வருகிறார்.

பல்வேறு வகையான சத்தான உணவு வகைகளை வழங்கி வரும் நிலையில் அகில பாரத மக்கள் கட்சி சார்பாக, இன்று எருக்கம்பெனி பகுதியில் உள்ள அருள்மிகு தென்னாட்டு ஸ்தலுத்து ஸ்ரீ கருப்புசாமி திருக்கோவில் வளாகத்தில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் தலைமையில் நடைபெற்ற பசி போக்கும் அன்னதான முகாமில் மாநில தலைவர் பாபு பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். முன்னதாக அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அந்த பகுதி ஏழை தொழிலாளர் குடும்பத்தினர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சமூக பணிக்கு கோவை வாழ் மக்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதில் அவருடன் இணைந்து வன ஆர்வலர் சண்முகசுந்தரம், மாநில மாவட்ட நிர்வாகிகள் வேல்ராஜ் ,சரவணன்,இளந்தென்றல் சிவா,சேகர்,சரவண குமார்,கோபால கிருஷ்ணன்,.சதீஷ்,நாகராஜ் , திருமதி.இந்திரா நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Be First to Comment