Press "Enter" to skip to content

அசத்தும் அரசு பள்ளி, ஆர்வமுடன் வரும் குழந்தைகள்…

கோவை மாநகராட்சி குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது காமராஜ் நகர் அரசு தொடக்கப்பள்ளி. இந்த ஆண்டிற்கான மாணவ மாணவிகள் சேர்க்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாணவர்களின் வருகையை பற்றி பள்ளியின் தலைமையாசிரியர். பியூலா கூறுகையில், “இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரங்களிலிருந்து மாணவ மாணவிகள் படிக்கின்றனர்.ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. சென்ற வருடம் மாணவர்கள் அதிக அளவில் பள்ளியில் புதிதாக சேர்ந்தனர். அதே போன்று இந்த வருடமும் சேர்க்கை ஆரம்பித்த இரண்டு நாட்களில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்தப் பகுதி மட்டும் இல்லாமல் சுந்தராபுரம், குறிச்சி, மதுக்கரை போன்ற பகுதிகளில் இருந்தும் வெவ்வேறு பள்ளியிலிருந்தும் வந்து சேர்கின்றனர்.

நாங்கள் அவர்களை பூங்கொத்து கொடுத்து பள்ளிக்கு வரவேற்றோம். இன்னும் புதிதாக வருகை புரியும் மாணவர்களையும் வரவேற்கக் காத்திருக்கிறோம். தனியார் பள்ளிக்கு நிகராக தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் சேர்க்கை நடைபெறுகிறது”. என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

“பள்ளியை விரிவுப்படுத்தி அரசு அல்லது தன்னார்வ அமைப்புகள் வகுப்பு அறைகள் கட்டி கொடுத்தால் இன்னும் அதிக அளவிலான குழந்தைகளை சேர்க்க முடியும். பள்ளி அருகே மாநகராட்சி இடம் இருக்கிறது. அதனை பள்ளிக்கு உபயோகித்தால் பள்ளி மேலும் வளர்ச்சியடையும்” என்கின்றனர் பள்ளி அருகே வசிக்கும் பொதுமக்கள்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks