Press "Enter" to skip to content

அசத்தும் இரண்டரை வயது சிறுவன்

கோவையை சேர்ந்த இரண்டரை வயது சிறுவன், காய்கறிகள்,பழங்கள்,கார்ட்டூன்கள் என பல்வேறு வகையான 480 படங்களின் பெயர்களை அடிபிறழாமல் சொல்லி அசத்தியுள்ளார்…
கோவை,இருகூர் பகுதியை சேர்ந்த விவேக் மற்றும் ஜெனிபர் ஆகியோரின் மகன் ஜென்விக் ஆலிவர்..இரண்டரை வயதே ஆன இந்த சிறுவன் 480 படங்களின் பெயர்களை பதினைந்து நிமிடத்தில் கூறி நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள், வண்ணங்கள்,வாகனம்,விலங்குகள்,மனித உடல் உறுப்புகள் என பல்வேறு துறை சார்ந்த சுமார் 480 படங்களின் பெயர்களை பதினைந்து நிமிடங்களில் சொல்லி அசத்தியுள்ளார்.இந்த சாதனை புரிந்த சிறுவன் ஆலிவருக்கு நோபள் புக் ஆப் ரெக்கார்டு தீர்ப்பாளர் சிவமுருகன் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.இது குறித்து சிறுவனின் தாயார் ஜெனிபர் கூறுகையில்,ஒரு வயது முதலே நினைவாற்றலுடன் இது போல பொருட்களின் பெயர்களை கூறுவதால்,வீட்டிலேயே பிரத்யேக பயிற்சி அளித்ததால் இந்த சாதனையை செய்ய முடிந்ததாக தெரிவித்தார்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks