கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதியதாக தொடங்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் முதல் நாளில் 50 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நவாவூரிலுள்ள, அண்ணா பல்கலை வளாக கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்ட நாளிலேயே, 50 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி வழிவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.அவ்வகையில், நவாவூரில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில், முதற்கட்டமாக மகளிர் விடுதியில், 100 படுக்கைகளுடன், கொரோனா சிகிச்சை மையம் நேற்று திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில நேரங்களிலேயே, ஏராளமான நோயாளிகள் வந்தனர். முதல்நாளான நேற்று மாலை வரை, 50 பேர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Be First to Comment