அண்ணாவின் 113 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கோவை தி.மு.க வடக்கு மாவட்டம், சுகுணாபுரம் பகுதி கழக பொறுப்பாளர் மு.ராஜேந்திரன் தலைமையில் ,92 வது வட்டம் மைல்கல் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.இதே போல சுகுணாபுரம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட கோவை புதூர் பிரிவு, பகுதியில் நடைபெற்ற விழாவில் கழக கொடியேற்றி அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, ஒண்றிணைவோம் வா திட்டத்தில் வழங்கப்படும் கொரோனா கால நிவாரண பொருட்கள் தொகுப்பை அவர் வழங்கினார். .இதில் சுகுணாபுரம் பகுதி நிர்வாகிகள், மற்றும் இளைஞர்,மகளிர் அணியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment