கோயம்பத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டம் ஓட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவகத்தில் கடந்த மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையையும், பரிந்துரைகளையும் கோயம்பத்தூர் பிரஸ் கிளப்பில் ஆய்வு பணியில் இடுப்பட்ட 7 பேர் கொண்ட கூழு வெளியிட்டுள்ளனர்.
ஒட்டர்பாளையத்தில் கடந்த மாதம் கிராம அலுவலகத்தில் கிராம உதவியாளர் முத்துசாமியை காலில் விழ வைத்த காணொலியும், கிராம உதவியாளர் வேல்சாமி என்பவரை தாக்கிய மற்றொரு காணொலியும் சமூகவலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சினை தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி மற்றும் உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
விவசாயி கோபால்சாமி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆதி தமிழர் பேரவை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சி விடுதலை சிறுத்தைகள் க்டசி, திராவிடர் விடுதலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திராவிட பண்பாட்டு கூட்டு இயக்கம் சார்பில் இந்த சம்பவம் தொடர்பாக உண்மையை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
அவர்களின் பரிந்துரைகள்;
ஓட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் மீது நடத்தப்பட்ட சம்பவகளின் உண்மை தன்மையை அரிய சிபிசிஐடி எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும். கிராம நிர்வாக அலுவலகத்தில் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ள தொகுப்பை காவல்துறை கைப்பற்றி வெளியிட வேண்டும் என்ற கேட்டுக்கொண்டனர்.
விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவாக போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வீடியோ தொகுப்பை தனித்தனியாக வெளியிட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக் வேண்டும்.
அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டியல் சமூக மக்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் உரிய தடுப்பு நடவடிக்கைகள், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என கேட்டுக் கொண்டனர்.
Be First to Comment