கோவை சரவணம்பட்டியில் கே.ஜி. நிறுவனங்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது, இதில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு டைனமிக் பொலிட்டிக்கல் லீடர் ஆஃப் இந்தியா என்ற விருதும் வழங்கப்பட்டது.
கோவை கேஜி நிறுவனங்களின் நூற்றாண்டு விழா சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி. ஐ.எஸ்.எல். கலையரங்கில் நடைபெற்றது. கே ஜி நிறுவனங்கள் துவங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன . கேஜி மருத்துவமனை துவங்கப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.
இந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு “டைனமிக் பொலிட்டிக்கல் லீடர் ஆஃப் இந்தியா” என்ற விருதும், கோவை கலெக்டர் சமீரனுக்கு “டைனமிக் அட்மினிஸ்டேட்டர் ஆஃப் இந்தியா” என்ற விருதும் வழங்கப்பட்டன.
இந்த விருதினை கே.ஜி. மருத்துவமனை தலைவர் டாக்டர் கே.ஜி. பக்தவத்சலம் வழங்கினார். அதுபோல் கே.ஜி. மருத்துவமனையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 130 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இந்த நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக வரவேண்டுமென 24 மணி நேரமும் பாடுபட்டு வருகிறார் முதல்வர், கோவை மாவட்டத்திற்கு என்ன தேவை என என்னிடம் கேட்டு பெற்றால் அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையிலும் முதலமைச்சர் ஈடுபட்டு வருகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக 97% வெற்றி பெற்றுள்ளது இந்த மகத்தான வெற்றியை தந்த கோவை மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல் பெற்றோரை இழந்த மாணவ மாணவியர்களுக்கு பள்ளி கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் முதல்கட்டமாக 500 பேரை தேர்வு செய்து அந்தப் பட்டியல் வழங்கும்படி கலெக்டரிடம் தெரிவித்துள்ளேன் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேசினார்.
விழாவில் கே.ஜி மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் மற்றும் மருத்துவமனை டாக்டர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் மற்றும் , திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, மாமன்ற உறுப்பினர் மாரிச் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Be First to Comment