சூட்டிங் இடையில் பொழுதுபோக்குகாக கோவை தெற்கு தொகுதிக்கு வரும் கமல்ஹாசன், உதயநிதியோடு படம் சம்பந்தமாக பேசும் போது, கோவை தெற்கு தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் பேசி தீர்வு கண்டால், தொகுதி மக்களுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் இன்று அமைச்சர்களை விட பவராக இருப்பவர் உதயநிதி தான் என பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ராமலிங்க காலனியில் பா.ஜ.கவின் மக்கள் சேவை மையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதைக் பார்வையிட்ட பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்:-

தமிழகத்தில் சமீபகாலமாக குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கபப்ட்டு வருவதாகவும்,நேய்க்கான காரணத்தை தடுக்காமல், தற்காலிக நடவடிக்கையைக் அரசு செய்து வருவாதகவும் அவர் குற்றம்சாட்டினார். குப்பைகள் அல்லாமல், கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் நோய்கள் பரவ காரணமாக அமைவதாக தெரிவித்த அவர், ஆட்சி அமைத்து பல நாட்கள் ஆகியும், இன்னும் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. கேட்டால் மருந்துகள் ஸ்டாக் இல்லை என்றும், டெண்டர் வரவில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.இது ஒரு பக்கம் இருக்க, நாங்கள் முன் மாதிரியான அரசு என்று வாய்சவுடால் அடிக்கிறார்கள் அமைச்சர்கள் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

உடனடியாக அரசு பள்ளிகள் மற்றும் பல்வேறு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள குடிசை பகுதிகளில் தேவையான மருத்துவ முகாமைக் ஏற்படுத்த வேண்டும். எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். கோவையில் உள்ள வாலாங்குளத்தில் டீசல் படகு சவாரி விடுவதால் அங்கு மீன்கள் செத்து மிதப்பதாக தெரிவித்த வானதி சீனிவாசன்,கோவையில் ஆமை வேகத்தில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.கோவை தெற்கு தொகுதில் கமல் நேற்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டுள்ளார். கழிப்பறை கட்டி தருகிறேன், சுத்தம் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.நான் வேண்டுமானல் எங்கெல்லாம் பிரச்சனை இருக்கிறது. என்று லிஸ்ட் தருகிறேன்.. அவர் உதயநிதியோடு ரொம்ப நெறுக்கமாக பழகி கொண்டிருக்கிறார். அவரிடம் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். அப்போது தான் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு, அவர் செய்த உதவியாக அது இருக்கும். எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக உதயநிதியோடு படம் சம்பந்தமாக கமல் பேசும் போது ,கோவை தெற்கு தொகுதி பிரச்சனையைக் பற்றி பேசினால் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் சூட்டிங் இடையில் இது போன்று, டைம் பாஸுக்காக வந்து நடித்து கொண்டிருப்பவரும் ஏனெனில் அமைச்சர்களைக் தாண்டி, பவராக இருப்பவர் உதயநிதி தான். என்றும் நான் சட்ட மன்றத்தில் நேரில் பார்க்கிறேன். முதல்வருக்கு பலரும் வணக்கம் வைப்பதை விட அவருக்கு தான் அனைவரும் முதலில் வணக்கம் வைக்கிறார்கள். என அவர் தெரிவித்தார்.தென்காசியில் நடந்த நவீன தீண்டாமை மிகவும் கண்டிக்கதக்கது. எனவும் சாதி மறுப்பு பேசி கொண்டிருக்கின்ற தமிழகத்தில் இது போன்ற சம்பவம் வேதனையானது. இந்த போக்கு மாற வேண்டும்.எனவும் கேட்டுக் கொண்டார்.

நாங்கள் மக்களுக்காக உழைக்கின்ற மோடி அவர்களின் பின்னால் இருப்பதால் நாங்கள் மோடி மாடல் என்று சொல்கிறோம். ஒவ்வொருவரும் அவருக்கு பிடித்த மாதிரி பெயர் வைத்து கொள்கிறார்கள் என கோவையில் காவி மாடல் என்று போஸ்டர் ஒட்டியது குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் பதிலளித்தார்.
Be First to Comment