பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவையில்
செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “நடந்து முடித்த மாநில பட்ஜெட் பொதுவிவாதத்தில் கல்லூரி மாணவர்களின் திறன் சார்ந்த வளர்ச்சிக்கான திட்டம், பெண்களுக்கான பாலின சமத்துவம் மற்றும் உரிமைகள் தொடர்பான மையம் அமைப்பது, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், குடிநீர் வழங்கல், தரமான சாலை போன்ற கோவை சார்ந்த பிரச்சனைகளை சட்டப்பேரவையில் எடுத்துரைத்தேன். ஆனால், அமைச்சர்கள் முழுமையாக பேசவிடவில்லை.

கோவை மக்கள் எதிர்பார்த்த சிறுவாணி, மெட்ரோ திட்டம் எதுவும் வரவில்லை. சிறு, குறு தொழில்களை ஊக்கமளிக்கும் அறிவிப்புகள் இல்லை.
வேளாண்துறை பட்ஜெட் என்பது 95% மத்திய அரசின் நிதியோடு செயல்படுத்தப்படும் திட்டங்களாக உள்ளது. என்றார்
விவசாயிகளின் விளைபொருட்களை நாடு முழுவதும் விற்கும் வகையில் E-Naam எனும் இணையதள சேவை 4 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறது. அதில் விவசாயிகளை இணைப்பதில் முனைப்புகாட்டாமல் தனியான ஆப் மற்றும் இணையதளம் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றை பயன்படுத்த விவசாயிகளுக்கு முதலில்
ஸ்மார்ட்போன் வழங்க வேண்டும்.
மத்திய அரசாங்கம் மாநில அரசுகளுக்கு நிதி வருவாயை பகிர்ந்தளிக்கிறது.
இம்முறை 24% அளவிற்கு உயர்ந்த வரி வருவாயை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
மத்திய அரசின் திட்டங்கள் வழியாக 6% அளவிற்கு கடந்தவருடம் உயர்ந்த நிதி தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.
ஆரம்பத்திலிருந்தே பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது.
பல பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கின்றன. அந்த நிறுவனங்களை சரிசெய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. எனவே, அதன் பங்குகளின் வாயிலாக நிதி திரட்ட வேண்டிய சூழல் உள்ளது.
கொரோனா காலகட்டத்திலும் இலவச ரேஷன், இலவச ஊசி, தொழில்துறைக்கான கடனுதவி ஆகியவற்றை அரசு வழங்கிவருகிறது. இதற்கான நிதி, வளர்சிக்கான நிதி ஆகியவை மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.
கல்வி, வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு ஆகியவற்றை பிரதமர் மோடி மக்களுக்கு வழங்கி இருக்கிறார். எனவே, மத்திய அரசுக்கு எதிரான வேலை நிறுத்த போராட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
பருத்தி விலை உயர்வால் பஞ்சாலைகள் பாதிக்கப்பட்டு வருவது குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து எடுத்திரைப்பேன்’ என பத்திரிக்கையாளர் சந்திப்பில் வானதி சீனிவாசன் தெரிவித்தார்
Be First to Comment