கோவையில் தி.மு.க கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு சீட் வழங்கியதை கண்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி வாகனத்தை முற்றுகையிட்ட தி.மு.க.வினரால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 18 மற்றும் 54 வது வார்டுகளை கூட்டணி கட்சியினருக்கு வழங்கியதை கண்டித்து தி.மு.க-வினர் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

கோவையில் தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை துவக்கி வைக்க அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
நிகழ்ச்சி முடிந்து அவர் திரும்பும் நிலையில் தி.மு.க-வினர் அவரது காரை வழிமறித்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் இருக்கும் மூன்று நுழைவு வாயில்களிலும் தி.மு.க-வினர் சூழ்ந்துகொண்டு அமைச்சரின் வாகனத்தை முற்றுகையிட காத்திருந்த நிலையில் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதை அடுத்து அமைச்சரின் வாகனம் செல்லும்போது முன்பாக கூடியிருந்த தி.மு.க-வினர், தி.மு.க கட்சியினருக்கு அப்பகுதியில் சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினருக்கு சீட்டு வழங்கியதை கண்டித்து அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பதில் ஏதும் சொல்லமல் அமைச்சர் வாகனத்தில் சட்டென்று புறப்பட்டுச் சென்றார். தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் செந்தில்பாலாஜியை தி.மு.க-வினரே முற்றுகையிட்டதால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Be First to Comment