அமைச்சர் பொன்முடிக்கு குஷ்பு கண்டனம்…

கோவை பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி, ”பெண்கள் படிப்பில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஒரு காலத்தில் பெண்கள் படிக்கவே கூடாது என்ற சமூகமும் இருந்தது. ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் படிக்கிறார்கள். இதுதான் திராவிடல் மாடல்.”

தமிழக அரசின் கொள்கை. மாணவர்கள் விரும்பும் எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம். தமிழக மக்களின் உணர்வுகளை ஆளுநருக்குத் தெரியப்படுத்தவே இதைக் கூறுகிறேன். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என பலர் சொல்கிறார்கள். இந்தி பேசுபவர்கள் பானிப்பூரிதான் விற்க முடியும் என அமைச்சர் பொன்முடி பேச்சு புயலை கிளப்பியுள்ளது. இது குறித்து பாஜக நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.” என பேசியிருந்தார்.

அந்த வகையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்புவும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்தி பேசும் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள், இந்தி பேசும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் விரைவில் பானிப்பூரி விற்க போகிறார்கள். அதை நாம் பார்க்க போகிறோம். இப்படி ஒரு வார்த்தையை அதுவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியது வெட்கக் கேடு. இது போன்றவர்களிடம் நாம் இவற்றை தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்? இதை முதல்வர் ஸ்டாலின் ஒப்புக் கொள்கிறாரா என தெரியவேண்டும் என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *