திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் சட்டசபையில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் மக்கள் மகிழும் வண்ணம் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடத்தக்க வகையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஓராண்டு நிறைவு கொண்டாட்டமாக, தலைமைச் செயலகம், சட்டசபை வளாகம், அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க ஸ்டாலின் இன்றைய தினம் தனது ஓராண்டு கால அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு பேசினார். மேலும் இன்றைய தினம் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அரசுப்பள்ளிகளில் தொடக்கப்பள்ளி பயிலும் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று கூறினார். முதற்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், அனைத்து மாணவர்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம். டெல்லியைப் போல் தமிழ்நாட்டில் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகள் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
Be First to Comment