கொரானா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பதற்கு மத்திய அரசு வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் அரசு உத்தரவின்படி புதிய கட்டுபாடுகள் விதிக்கப்படுகின்றன.
அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பொதுமக்கள் அமாந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறி மொத்த கொள்முதல் மார்க்கெட் அனைத்தும் நண்பகல் 12.00 மணிவரை மட்டுமே செயல்படும்.
தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிசாதன வசதியின்றி நண்பகல் 12.00 மணிவரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம் போல எந்தத் தடையும் இன்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12.00 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊாவலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.
தடையின்றி தொடர்ந்து செயல்படவேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின் போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டு, கோவையில் தற்காலிகமாக சாஸ்திரி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ள மலர் அங்காடி, ஊரடங்கு காலம் முழுமைக்கும் மூடிவைக்கப்படுகிறது. மலர் அங்காடிக்கு யாரும் மலா் வாங்க வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
பொதுமக்கள் அனைவரும் இந்தக் கட்டுப்பாடுகளைக் கடைபிடித்து கொரோனா வைரஸ் நோயின் பரவலைத் தடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அரசு உத்தரவின்படி புதிய கட்டுபாடுகள்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment