Press "Enter" to skip to content

அரசு மருத்துவமனைக்கு கூடுதல் வசதிகளை அளித்த குறிச்சி பிரபாகரன்

கோவை கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மதுக்கரை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த குறிச்சி பிரபாகரன் அங்கு கொரோனா சிகிச்சைக்கு வரும் தொகுதி மக்கள் பயன்பெறுவதற்கு தேவையான வசதிகள் குறித்து மருத்துவர் கண்ணன் மகாராஜ் உடன் ஆலோசித்தார்.


அங்கு படுக்கைகள் அதிகப்படுத்தவும் சென்ட்ரல் ஆக்சிஜன் சிஸ்டம், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மின் விசிறி, குளிக்க சுடு நீர் வசதி, குடிக்க சுடு நீர் வசதி ஆகிய தேவைகளை அறிந்தவுடன் குறிச்சி பிரபாகரன் உடனடியாக மாவட்ட ஆட்சியர், சுகாதார துறை அமைச்சர் மூலமாக சென்ட்ரல் ஆக்சிஜன் வசதி செய்ய வற்புறுத்தினார். உடனடியாக சென்ட்ரல் ஆக்சிஜன் வசதி துவங்கப்பட்டது.

ஆடிட்டர் இராஜேஸ், ஆடிட்டர் சுபாஷிணி, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரோபாலிஸ் உறுப்பினர் எல்டெக்-செல் சதீஸ், கோவை ஜீ.டி. மெட்ரிக் பள்ளி முன்னாள் மாணவர்கள் உதவியுடன் இன்று 12 மின் விசிறிகள், 20 மின் விளக்குகள், 5 ஜாக்குவார் வாட்டர் ஹீட்டர்கள் அனைத்தையும் மருத்துவர் கண்ணன் மகாராஜனிடம் குறிச்சி பிரபாகரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வீடியோ 👇

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks