அரசு மருத்துவமனையில் ஊசிகள் மற்றும் பேண்டேஜ் தரமில்லை என்று குற்றச்சாட்டு – பெண்ணின் கை வீக்கம்..!
கோவை அரசு மருத்துவமனையில் குளூகோஸ் மற்றும் நரம்பு வழியாக மருந்து செலுத்த பயன்படுத்தப்படும் ஊசிகள்(Needle) தரமற்றதாகவும் , ஒட்டப்படும் பேண்டேஜ்கள் பச்சையில்லாமலும் உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ”அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு குளூக்கோசை நரம்பு வழியாகச் செலுத்த ஊசி குத்தப்படுகிறது. அவ்வாறு செலுத்தப்படும் ஊசிகள் தரமற்று உள்ளது. மேலும், ஊசியைப் பிடிக்க ஒட்டப்படும் பேண்டேஜ்கள் தரமில்லாமல் உள்ளது. அதனால் நோயாளிகளின் உடலில் ஊசிகளில் உள்ள பேண்டேஜ் சரியாக ஒட்டாமல் திரும்பத் திரும்ப கழன்று வருகிறது.
இதனால் கைகளில் பலமுறை ஊசியை குத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக நோயாளியின் நரம்புப் பகுதியில் காயம் ஏற்படுதல், வீங்குதல், வலி ஏற்படுதல், சீழ் பிடித்தல் பேன்ற விளைவுகள் ஏற்படுகிறது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.” என்றனர்.
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் ஏழைகளுக்கு முறையாக சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக தீராத ஒன்றாக இருந்து வருகிறது. குறைந்தபட்சம் தரமான மருத்துவ உபகரணங்களையாவது பயன்படுத்தலாமே என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
Be First to Comment