கோவை அரசு மருத்துவமனை முன்பு நீண்ட நாட்களாக தேங்கி இருந்த குப்பை மற்றும் சாக்கடை தூர்வார படாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 83 வார்டு மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். உடனடியாக அங்கு வந்த பணியாளர்கள்ள அதனை சுத்தம் செய்தனர். இந்த பணியினை 73 வார்டு செயலாளர் தண்டபாணி, 72 வார்டு செயலாளர் விஜயகுமார் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

Be First to Comment