தஞ்சை அய்யம்பேட்டை பகுதியில் இந்து மக்கள் கட்சி பொதுக்கூட்டம் இன்று நடக்கவிருந்த நிலையில் பெட்டவாய்த்தலையில் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி போலீஸ் கைது செய்தது.
இதுப்பற்றி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நம்மிடையே தொலைபேசியில் கூறியதாவது, ”முதலிலேயே சொல்லி இருந்தால் கோவையிலேயே கைதாகியிருப்பேன். பொதுக்கூட்டம் நடந்த அனுமதிக்காமல் திடீரென கைது செய்ததை கண்டிக்கிறேன்” என்றார்
Be First to Comment