கோவை கணபதி சத்தி சாலையில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென அதி்நவீன உபகரணங்களுடன் கூடிய அர்பன் ஃபிட் கிளப் எனும் பிரத்யேக நவீன உடற்பயிற்சி மையம் துவக்கப்பட்டது.
உடலை ஆரோக்கியம் மற்றும் கட்டுக்கோப்பாக வைப்பதில் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் மாறி வரும் சூழ்நிலைக்கேற்ப பல்வேறு நவீன வகை உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய அர்பன் ஃபிட் கிளப் எனும் உடற்பயிற்சி மையம் கோவை கணபதி கோவை இ.என்.டி.மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் துவங்கப்பட்டுள்ளது.
தினேஷ்,கீர்த்தி கிருஷ்ணா,தண்டபாணி ஆகிய மூன்று இளைஞர்கள் இணைந்து துவங்கியுள்ள அர்பன் ஃபிட் கிளப்பின் துவக்க விழாவில் அவர்களது பெற்றோர்கள் ஸ்ரீதர்,முருகராஜ்,மற்றும் டாக்டர் கலா ஆகியோர் இணைந்து மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வெல்கேர் உடற்பயிற்சி உபகரணங்கள் நிறுவனத்தின் சி.இ.ஓ.மகேஷ்,அஜ்வா பிட்னஸ் சி.இ.ஓ.சிவராஜ் மற்றும் கோபிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நவீன உடற்பயிற்சி மையத்தில்,ஆண்கள் மற்றும் பெண்கள் உடற்பயிற்சி செய்வதற்கான நவீன வகை உபகரணங்கள், எடை குறைப்பு கருவிகள்,மற்றும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் பிரத்யேக பயிற்சி முறைகள்,உலகத்தரம் வாய்ந்த ஸ்டெப் மில்,ரோபோ ஆர்ம்,மௌண்டன் ட்ரேக் ஸ் போன்ற நவீன கருவிகள் அனைத்தும் ஒரே இடத்தில் அமையபெற்ற ஒரே உடற்பயிற்சி மையமாக அர்பன் ஃபிட் கிளப் அமைந்துள்ளது.
இது குறித்து இதன் பங்குதார்களில் ஒருவரான தினேஷ் கூறுகையில்,தற்போதைய சூழலில் உடற்பயிற்சி முக்கிய தேவையாக இருப்பதால் இந்த மையத்தை துவக்கி உள்ளதாகவும்,குறிப்பாக இங்கு சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு ஆலோசனைகள் வழங்க இருப்பதாகவும், மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இங்கு பயிற்சி செய்யும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக விளையாட்டு துறையில் சாதிக்க விரும்புவர்களுக்கு சிறப்பு சலுகைகளும்,மேலும் ஆரம்ப வாடிக்கையாளர்களுக்கு மூன்று நாட்கள் இலவச அனுமதி எனும் மூன்று ட்ரயல் வழங்குவதாக தெரிவித்தார்.
Be First to Comment