கோவை மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாகப் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இருந்த போதிலும் கொரோனா தொற்று கட்டுக்கடங்காமல் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இது குறித்து கோவை பிரீத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் எஸ் தண்டபாணி கூறுகையில் தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையில் அதிகம் இளைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும்,இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இல்லாமல் வாந்தி,வயிற்றுபோக்கு உள்ளிட்ட அறிகுறிகள் மட்டுமே அதிகம் காணப்படுவதாக தெரிவித்தார். மேலும் தனிமனித இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் அதிக கூட்ட நெரிசல், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் போது இரண்டு முக கவசங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட வேண்டும் என தெரிவித்த அவர் இந்த தடுப்பூசி மூலம் 90சதவீதம் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

அறிகுறி இல்லாமல் இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு – மருத்துவர் தண்டபாணி
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment