அ.தி.மு.கவின் மிக முக்கிய புள்ளிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிட போகிறார்கள், யார் யாருக்கு வாய்ப்பு என்ற தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழக அரசியல் களத்தை பரப்பரப்பாக்கி வருகின்றது.
அ.தி.மு.க-வின் ஒரு உத்தேச பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, எந்த எந்த கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்படும் என்ற லிஸ்ட் தரப்பட்டுள்ளதாம். அதில் பா.ஜ.க-வுக்கு 20 சீட்டுக்களும்,பா.ம.க-வுக்கு 21 சீட்களும், தே.மு.தி.க-வுக்கு 14 சீட்டுகளும், த.மா.கா-வுக்கு 5 சீட்டுகளும், மற்ற கட்சிகளுக்கு 3 சீட்டுகளும் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மீதமுள்ள 171 தொகுதிகளிலும் அ.தி.மு.கவே நேரடியாக களமிறங்க போகிறது. அந்த 171 தொகுதிகளில் யார், யார் எங்கே போட்டியிட போகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளதுதான் தற்போதைய பரப்பரப்புக்கு காரணம்.
இப்போதுள்ள சிட்டிங் அமைச்சர்கள் அவரவர் தொகுதியிலேயே போட்டியிடுவர் என்றும் சொல்லப்படுகிறது. இதெல்லாம் ஒரு உத்தேச பட்டியல் என்றாலும், அ.தி.மு.கவின் உத்தேச பட்டியல் போன்று தி.மு.க வெளியிட்டால் அது தி.மு.கவினருக்கிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும் என்பதே உண்மை.
Courtesy : tamil.oneindia.com
Be First to Comment