Press "Enter" to skip to content

அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகி கே.பி.ராஜூ காலமானார்

கோவை அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் எம்.எல்.ஏ.வு-மான பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த கோவையைச் சேர்ந்த கே.பி.ராஜு சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அ.இ.அ.தி.மு.க இயக்கம் தோன்றிய காலம் முதல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது தீவிர பெற்றுக்கொண்டவர். ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் அ.தி.மு.கவை வளர்த்ததில் முக்கிய பங்காற்றிய மூத்த முன்னோடி, பொறுப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், கட்சியினரிடமும், பொது மக்களிடமும்,மாற்றுக் கட்சியினரிடமும் இனிமையாகவும், எளிமையாகவும் பழக்கக்கூடிய பண்பாளர், அ.தி.மு.க-தான் உயிர்மூச்சு என்று வாழ்நந்தவர்.
கே.பி.ராஜீ என்று அழைக்கப்படும் கே.பி.ராஜூ, கோவை மாவட்ட பால்வள ஒன்றிய தலைவர், அவைத்தலைவர், முன்னாள் தமிழ் நாடு பஞ்சாலை அமைப்பின் தலைவர், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் என பல்வேறு கட்சிப் பதவிகளை வகித்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனில்லாமல் காலமானார்.


1980ல் தேனியில் நடைபெற்ற தேர்தலில் இவர் ஆடிய ஒயிலாட்டத்தை பார்த்த எம்.ஜி.ஆர் இவரை பாராட்டியது இன்றளவும் இவரது உடன் இருந்தவர்கள் நினைவுப்படுத்தி பேசுகின்றனர். 1984ல் கேரளா சென்ற எம்.ஜி.ஆர் இவரது வீட்டிற்கு வந்து பால் அருந்தியது அன்று பெரிதளவில் பேசப்பட்டது. இவர் பேரூர் தொகுதியில் இருந்து கடந்த 91ஆம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு 5 ஆண்டுகள் மக்கள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks