உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பொது இடங்களில் நிகழ்ச்சி நடைபெற தடை விதித்துள்ளதால் அலுவலகங்களில் அண்ணா திருவுரு படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக அண்ணாவின் 53-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிகள், அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் உள்ளிட்டவை தேர்தல் அதிகாரிகளால் மறைக்கப்பட்டுள்ளது.

இதனால் கட்சி பொருப்பாளர்கள்,தொண்டர்கள் தங்களது இல்லம் மற்றும் அலுவலகத்தில் அண்ணாவின் புகைப்படங்கள் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் கோவை அண்ணா சிலை அருகில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் அறிஞர் அண்ணா திருவுரு படத்தை வைத்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், அம்மன் கே அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
Be First to Comment