Press "Enter" to skip to content

அ.தி.மு.க எதிர்கட்சி வாய்ப்பை இழக்க வேண்டிய சூழ்நிலை வரும் என கொங்கு ஈஸ்வரன் பேச்சு

கோவை விமான நிலையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டியளித்தார். அப்போது அவர் ”தமிழக மக்கள் அதிக எதிர்பார்ப்புகளோடு, ஆட்சி மாற்றத்தை கொடுத்து சிறப்பான ஆட்சியை அமர்த்தி உள்ளனர். பதவியேற்ற முதல்வர் தனது அதிகாரிகளை தேர்வு செய்ததில் இருந்தே அவர் எப்படி ஆட்சி நடத்த போகிறார் என்று தெரிந்திருக்கும், தலைமை செயலாளர், முதல்வரின் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த அணியை பார்க்கும் போது தமிழகத்தில் நிர்வாகம் மிக சிறப்பாக நடக்கும் என்பது தெரிந்திருக்கும். மிக சிறப்பாக ஆட்சியை ஆரம்பித்துள்ளார். முதல் நாளிலேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத்திட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் தீவிரமாக செயல்பட்ட துவங்கியுள்ளார். கடந்த சில நாட்களாகவே அதிகாரிகளை அழைத்து பேசி பணிகளை தீவிரபடுத்தி உள்ளார் என்பதும் அனைவருக்கும் தெரியும் என கூறினார். வெகு சீக்கிரம் கொரோனா பிடியில் இருந்து தமிழகத்தை மீட்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எதிர்பார்த்தது போல தமிழகத்தை வளர்ச்சியை திட்டங்களை நிறைவேற்றி, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, பணப்புழக்கத்தை அதிகரிக்கும் திட்டத்தோடு களத்தில் இறங்கியுள்ளார்.தமிழக முதல்வருக்கும், அமைச்சர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். நல்ல அமைச்சர்களை தேர்வு செய்தது மட்டுமல்ல சமூக நீதியை முதல்வர் கவனத்தில் கொண்டுள்ளார் என்பது அந்த பட்டியலை பார்த்தாலே தெரிகிறது.
அதிமுக கட்சியில் எதிர் கட்சி தலைவர் தேர்வு செய்வதில் குழப்பம் வரும் என்பது எதிர்பார்த்தது தான், சுமுக தீர்வு காணமல் இப்போது தள்ளிப்போட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில் ஏதோ ஒட்டிக்கொண்டு இருந்தார்கள், இப்போது பிரச்சனை ஆரம்பித்துள்ளது, இதற்கான முடிவை தீவிரமாக எடுக்கவில்லை என்றால் அதிமுக எதிர்கட்சி வாய்ப்பை இழக்க வேண்டி வரும் என தெரிவித்தார்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks