Press "Enter" to skip to content

அ.தி.மு.க வழக்கறிஞர்கள் புகார் மனு

கோவையில் முன்னால் அமைச்சரும், அ.தி.மு.க சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் அவதூறு புகாரை பரப்பி வரும் தி.மு.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், ”கோவையை சேர்ந்த தி.மு.க பிரமுகர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்பவர் சமீபத்தில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி, கடந்த அ.தி.மு.க ஆட்சியையும், முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் மீதும் கலங்கம் கற்பிக்கும் விதமாக கோவை மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சி பணிகளை கொச்சை படுத்தும் விதமாக, சாலை இடுதல், டெண்டர் விடுதல், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளில் பெரிய அளவில் முறைகேடுகள், நடந்ததாக, ஊடகங்களுக்கும், சமூக வலைதளங்களிலும் அவதூறு புகாரை பரப்பி வருகிறார்.

இதனை கண்டித்து கோவையில் அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த வழக்கறிஞர்கள். முன்னாள் அமைச்சரின் எஸ்.பி. வேலுமணியின் நற்பெயருக்கு கலங்கம் விளைக்கும் விதமாக அடிப்படை ஆதாரம் இல்லாமல் புகாரை பரப்பிவரும் ரகுநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks