கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை ஒருவர் கையில் பையுடன் வந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை செய்ய முயன்றனர்.
ஆனால் அதற்குள் பையிலிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து அவரை தடுத்த போலீசார் மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். தொடர்ந்து விசாரித்ததில் அவர் திருநெல்வேலியை சேர்ந்த குமாரசாமி என்பதும், பெரியநாயக்கன்பாளையம் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பணிபுரிந்த வருவதும் தெரியவந்தது.

மேலும் அந்த ஓட்டலில் சம்பளம் தராததால் விரக்தியடைந்த குமாரசுவாமி தீக்குளிக்க முயன்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப நாட்களாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாமிற்கு வரும் பலரும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment