ஒவ்வொரு தனிமனிதனின் கணவும், வாழ்நாளில் ஒரு கார் வாங்க வேண்டும் என்பது தான். எத்தனை நிறுவனங்களின் கார்கள் மார்ட்கேட்டில் விற்பனைக்கு வந்தாலும் டொயோட்டா நிறுவன கார்கள் என்பது கார் பிரியர்களின் மனதில் முதலிடம் பிடிக்கும். அது என்னவோ தெரியவில்லை சாமானியர்கள் முதல் அரசியல் வாதிகள் வரை, தொழிலதிபர்கள் என அனைவரும் விரும்பும் ஒரு கார் நிறுவனமாக டொயோட்டா திகழ்ந்து வருகிறது. முதன்மைக்கு முதன்மையாக இந்த கார்களை விற்கும் நிருவனமாக உள்ளது தான் ஆனமலைஸ் டொயோட்ட ஷோரும் நிருவனத்தார். கோவை சாய்பாபா காலனி பகுதியில் செயல்படும் இந்த நிறுவனம் டொயேட்டா நிருவனத்தின் அனைத்து ரக கார்களை விற்பதில் முதலிடம் பெறுகிறது.

இந்நிலையில், இன்று ஒரு புதிய காரை அறிமுகப்படுத்தி அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளது ஆனமலைஸ் டொயேட்டா நிருவனம். ” அர்பன் க்ரூஷியர் ஹைரைடர் ( self- charging hybrid electric SUV) புதிய காரினை அறிமுகம் செய்துள்ளது. இன்று நடைபெற்ற துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் அருண்குமார் புதிய காரினை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அர்பன் க்ரூஷியர் ஹைரைடர் என்ற இந்த புதிய கார் 11 கலர்களில், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டி என் இருவகைகளில் இயக்கும்படி தயாரிக்கபட்டுள்ளது. இவ்விழாவில் ஆனமலைஸ் டொயோட்டா நிர்வாக இயக்குனர் சி.எஸ். விக்னேஸ்வர், தலைமை மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வாடிக்கையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
Be First to Comment