தமிழக அரசு அறிவித்தபடி ஆவின் பால் விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வந்தது.
திமுக ஆட்சிக்கு வந்தால் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது. திமுக தலைவர் மு. க.
ஸ்டாலின் முதல்வரான பின் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். ஆவின் பால் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பும் அப்போது வெளியானது. பால் விலை குறைப்பு 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஆவின் பால் விலை குறைப்பு நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வந்தது. நீல நிற பால் பாக்கெட் ஒரு லிட்டர் 40 ரூபாய், அரை லிட்டர் 20 ரூபாய், பச்சை நிற பால் பாக்கெட் அரை லிட்டர் ரூபாய் 22, ஆரஞ்சு நிற பால் பாக்கெட் 24 ரூபாய் என புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பால் பாக்கெட்டில் விற்பனை தேதியும் புதிய விலையும் ஆவின் கார்டுதாரர்களுக்கு விலையும் அச்சிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவை பகுதிகளில் பெண்கள் காலை முதல் ஆர்வத்துடன் பால் வாங்கி சென்றனர்.
Be First to Comment