தனது புதிய புகைப்படங்களை சாமியார் நித்யானந்தாவின் கைலாச முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருப்பதி ஏழுமலையானை போல் தோற்றத்தில் நித்யானந்தா உள்ளார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை, குஜராத் ஆசிரம வழக்கு என பல்வேறு நெருக்கடி இருக்கின்ற நிலையில், நித்யானந்தா எங்கே இருக்கிறார் என தேடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் நித்தியோ எங்கோ இருந்தபடி தினமும் தனது முகநூல் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை வழங்கி கொண்டுதான் இருக்கிறார்.
தினமும் வீடியோ மூலமாக ஏதாவது பேசி பரபரப்பு ஏற்படுத்திக்கொண்டே இருந்தார் நித்யானந்தா. சில நாட்களாக சர்ச்சை ஓய்ந்திருந்த நிலையில் தற்போது தன்னை திருப்பதி ஏழுமலையானை போல் வேடமிட்டு அந்த புகைப்படத்தை தனது இணையதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இது பல்வேறு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

Be First to Comment