இந்திய விமானப் படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது. கோயம்புத்தூர் அவினாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் இந்திய விமானப்படையினர் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது.

இந்திய விமானப்படையில் உள்ள பல்வேறு பிரிவுகள், அதில் உள்ள வேலை வாய்ப்புகள், அதற்கான கல்வித் தகுதிகள் ஆகியவை குறித்து கல்லூரி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்திய விமானப்படையினர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தினர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை சார்பில் கொண்டுவரப்பட்ட சிறப்பு விழிப்புணர்வு வாகனத்தினை கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் இந்திய விமானப்படை அதிகாரிகள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோன்று கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் என இந்திய விமானப்படை அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment