கொடிய கொரோனா வைரஸை அழிக்க கோவை நாகசக்தி சித்தர் பீடத்தில்,வேப்பிலை மற்றும் மஞ்சள் புகையுடன் , பஞ்ச பூத ,வாயு சாந்தி பூஜைகள் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இதே போல முதல் அலை பரவ துவங்கிய போதே,நாகசக்தி அம்மன் பீடத்தின் சுவாமி பாபுஜி சுவாமிகள் பாரம்பரிய மூலிகைகளுடன் சிறப்பு யாகங்கள் செய்திருந்தார்.
கொரோனா இரண்டாம் அலை தற்போது வேகமெடுத்திள்ள நிலையில்,கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் அமைந்துள்ள நாகசக்தி சித்தர் பீடத்தில் நாகசக்தி , பஞ்சபூத , வாயு சாந்தி என மூன்று பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் வாயு சுத்தி யாகம் நடைபெற்றது.தொடர்ந்து,சிறப்பு அபிஷேகங்கள் ,செய்து வைரசை அழிக்கும் புதிய யுக்தியாக வேப்பிலை புகை தூபம் இடப்பட்டது. குறிப்பாக கொரோனா வைரஸை அழிக்கும் விதமான வேப்பிலை தூபத்துடன் 108 மூலிகை தூபம் குறித்து, ஸ்ரீ சிவ பாபுஜி சுவாமிகள் கூறுகையில்,நமது பாரம்பரிய மூலிகைகளை கொண்டு காற்றை சுத்தப்படுத்துவதால் இந்த வைரஸை கட்டுபடுத்த முடியும் எனவும்,குறிப்பாக காற்றில் பரவுவதாக கூறப்படும் கொரோனா வைரசை அழிக்க வேப்பிலையுடன் சிறிது மஞ்சள் கலந்து அனைவரது வீடுகள் மற்றும் தொழிற்சாலை கூடங்களில் தூபங்கள் செய்வதால் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுப்பதோடு கொரோனா வைரசை அடியோடு அழிக்க முடியும் என தெரிவித்தார்.
Be First to Comment