இரத்தினம் கல்லூரியில் இன்று கோவையைச் சேர்ந்த அக்னி டெக், ஈரோட்டை சேர்ந்த தி கிரியேட்டர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் , இரத்தினம் கல்வி குழுமமும் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர் மற்றும் வடிவமைப்பு கலை கழகம் (design academy), தொடக்கவிழாவும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அக்னி டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்திலதிபன், தி கிரியேட்டர் இன்டஸ்ட்ரீஸ் முனைவர் பிரபு மற்றும் இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர் மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார்.

இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர்.நித்தியானந்தம், இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் முனைவர்.நாகராஜ், இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர். மாணிக்கம், இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.முரளிதரன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் பேசுகையில் இன்றைய நவீன காலத்தில் இயந்திரவியல் தொழில்நுட்பம் அபார வளர்ச்சியடைந்துள்ளது அதில் வேலைவாய்ப்புகளும் பெருகிவருகிறது. எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர்கள் படிக்கும் போதே நிறுவனத்தில் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) பெற முடியும். இந்த நிறுவனத்தின் பொறியாளர்கள் மாணவர்களுக்கு நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சியை கல்லூரிக்கு வந்தும், நிறுவனத்திலும் பயிற்சி அளிப்பார்கள்.
மேலும் ஆசிரியர்கள் தங்களது கண்டுபிடிப்புகளையும் புதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இந்த நிறுவனத்துடன் இணைந்து வெளியிடலாம். மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் இந்த நிறுவனம் வழங்கும்.
Be First to Comment