கோவையைச் சேர்ந்த இக்னோரா சொலுஷன்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனமும் , இரத்தினம் கல்வி குழுமமும் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதற்கான துவக்க விழா இணையம் வழியாக நடைபெற்றது.
இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர் மதன் ஏ.செந்தில் தலைமையில் நடைபெற்ற இதில்,இக்னோரா சொலுஷன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கவுசிக் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் . நித்தியானந்தம் , முதல்வர் முனைவர் நாகராஜ், இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் மாணிக்கம் மற்றும் முதல்வர் முனைவர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மதன் ஏ.செந்தில் பேசுகையில் இன்றைய நவீன காலத்தில் தகவல் தொழில்நுட்பம் அபார வளர்ச்சியடைந்துள்ளது அதில் வேலைவாய்ப்புகளும் பெருகிவருகிறது. எனவே மாணவர்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார் . இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர்கள் படிக்கும் போதே நிறுவனத்தில் பயிற்சி பெற முடியும் . இந்த நிறுவனத்தின் பொறியாளர்கள் மாணவர்களுக்கு நிறுவனங்களுக்கு தேவையான பயிற்சியை கல்லூரிக்கு வந்தும் , நிறுவனத்திலும் பயிற்சி அளிப்பார்கள்.இதனால் மாணவர்கள் வேலை வாய்ப்புகளையும் எளிதில் பெற இயலும் என தெரிவித்தார்
Be First to Comment