கோவை மாவட்டம் துடியலூரில்- கணுவாய் செல்லும் சாலையில் இண்டியன் ஹாட் சிப்ஸ் என்ற கடை ஒன்றில் கடந்த 25ம் தேதி இரவு 10.45 மணி அளவில் அங்கு பணிபுரியும் ஊழியர் கடையை பூட்டிவிட்டு தனது இருசக்கர வாகனத்தை சைடு லாக் போடாமல் கடையின் முன் நிறுத்திவிட்டு பின்புறமாக உள்ள குளியறைக்கு சென்று குளித்துவிட்டு வந்து பார்த்துள்ளார்.
அப்போது அங்கு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது. இதையடுத்து கடையின் முன்புறம் பொருத்தியுள்ள சிசிடிவி கேமராவில் பார்த்துள்ளனர். அதில்
ஒரு இளைஞர் சுற்றும் முற்றும் நோட்டமிட்டவாறு இருசக்கர வாகனத்தின் அருகில் வந்து சிறிது நேரம் நின்றுவிட்டு நைசாக பெட்ரோல் இல்லாத வண்டியை தள்ளிச் செல்வது போல சாலையில் தள்ளியபடியே இருசக்கரவாகனத்தை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.
இதையடுத்து கடை உரிமையாளர் அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சியில் திருடனின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளதால் அதனை வைத்து திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
Be First to Comment