பெட்ரோல் விலையை கட்டுபடுத்தாத மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு சக்கர வாகனத்தை பாடையில் கட்டி வந்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய் என்ற உச்சத்தை தொடும் வகையில் கடுமையான விலையேற்றம் அடைந்து வருகிறது.இந்நிலையில் இந்த விலையேற்றத்தை கட்டுபடுத்தாத மத்திய பா.ஜ.க.அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.அதன் படி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக அவினாசி சாலையில், அண்ணா சிலை அருகில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இதில்,இரு சக்கர வாகனத்தை பாடையில் கட்டி வந்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன கோசங்கள் எழுப்பினர்.
இதே போல டி.எஸ்.பி.அலுவலகம் அருகில் உள்ள பெட்ரோல் நிலையம் முன்பாக இளைஞர் காங்கிரசாரும், குறிச்சி முத்தையாநகர் அருகே உள்ள பெட்ரோல் நிலையம் முன்பாக குறிச்சி காங்கிரசாரும் விலையேற்றத்தை கட்டுபடுத்த மத்திய அரசு தவறி விட்டதாக இளைஞர் காங்கிரசார் குற்றம் சாட்டினர்..இதே போல கோவையில் பல்வேறு இடங்களில்,நடைபெற்ற போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

இரு சக்கர வாகனத்தை பாடையில் கட்டி வந்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment