பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வரும் மாணவி நூரி பாத்திமா. தமிழக முதல்வர் மு.க.ஸ்டலின் இலங்கைக்கு நிதி உதவி அறிவிப்பின் காரணமாக தொலைக்காட்சியில் வரும் செய்தியை கவனித்த சிறுமி பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கும் இலங்கை மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என நினைத்து தனது உண்டியலில் உள்ள சிறு சேமிப்பு பணத்தை இலங்கைக்கு கொடுக்க வேண்டும் என்று தந்தை இக்பாலிடம் கூறியுள்ளார்.

இதனை அறிந்த குழந்தையின் தந்தை இக்பால் அவர்கள் உடனடியாக உண்டியலில் உள்ள சில்லறை காசுகளை மொத்தம் சேர்த்து அருகில் உள்ள வங்கி கிளைக்கு சென்று சிறுசேமிப்பு காசுகளை வழங்கி தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 1073/- தொகையினை காசோலையாக பெற்றார். அதனை பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது தந்தையுடன் நேரில் சென்று ஆட்சியரிடம் காசோலையை வழங்கினார் மாணவி நூரி பாத்திமா.
Be First to Comment