கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் வானதி சீனிவாசன். வரும் 9ஆம் தேதி புதிய திட்டம் ஒன்றை தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான அழைப்பிதழ்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் அமுதம் என்ற பெயரில் பசும்பால் கொடுக்கும் பணி தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவை மக்கள் சேவை மையம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.

வரும் மே 9ஆம் தேதி மாலை 3 அளவில் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை கோவை அவினாசி சாலையில் அண்ணா சிலை அருகில் உள்ள ஜி.டி.அரங்கில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தலைமை தாங்குகிறார். தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை முன்னிலை வகிக்கிறார். அவருடன் ரோட்டரி சங்கத்தின் ராஜசேகர் சீனிவாசன், ராஜ்மோகன் நாயர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்களின் நலனை கருத்தில் கொண்டு அமுதம் பால் கொடுக்கும் பணி தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2 வயது வரையிலான குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இலவசமாக பசும்பால் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Be First to Comment