“இல்லம்தோறும் தேசியக் கொடி திட்டம்” இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கடை, கடையாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நேரில் சென்று பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தேசியக்கொடி வழங்கினார்.
இல்லம்தோறும் தேசியக் கொடி என்ற திட்டம் இளைஞர்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தும், இத்திட்டம் மூலம் வீடுகளில் ஏற்றப்படும் கொடி இரவிலும் பறக்கலாம்” என்று பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, தேசிய கொடியை வழங்கினார். மூவர்ண கொடி குழந்தைகள் மனதிலும் இளைஞர்கள் மனதிலும் பதிய வேண்டும் என்பதற்காக இல்லம் தோறும் தேசியக் கொடி என்ற திட்டத்தை மத்திய அரசு சார்பாக பாரத பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

இல்லம் தோறும் தேசியக் கொடி என்ற திட்டம் இளைஞர்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தும். தேசியக் கொடியை இரவில் ஏற்றக் கூடாது என்பார்கள். இந்தத் திட்டத்தின் மூலம் வீடுகளில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஏற்றப்படும் கொடி ஆகஸ்ட் 15 ம் தேதி மாலை 6 மணி வரை பறக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். நமது தேசியக் கொடி எல்லா இல்லங்களிலும் பட்டொளி வீசி பறக்கும்போது இந்த சுதந்திர தினம் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்”
இந்த நிகழ்ச்சியில் உக்கடம் மண்டல தலைவர் சேகர் மற்றும் மாநில, மாவட்ட மண்டல நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Be First to Comment