நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும், சம்பளத்தை உயர்த்தி தர கோரியும் இல்லம் தேடி மருத்துவம் பணியாளர்கள் மனு.
கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட இல்லம் தேடி மருத்துவம் பணியாளர்கள் தங்களுக்கு மாத சம்பளத்தை உயர்த்தி தர கோரியும் நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்று தர வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தங்களுக்கு மாத சம்பளமாக 4500 வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை உயர்த்தி தர வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள சம்பளத்தை பெற்று தர மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் மாதத்தில் அனைத்து நாட்களுமே தங்களை பணிக்கு வர கட்டாயப்படுத்துவதாகவும், கூறினர். மேலும் முன்களப்பணியாளர்களான தங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுமென கேட்டுகொண்ட அவர்கள் இல்லையெனில் முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Be First to Comment