கோவையில் இளம்பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தியதாக சேலத்தைச் சேர்ந்த இளைஞரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.
கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இளம் பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி, தொல்லை கொடுத்ததாக இளம் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேலத்தை சேர்ந்த கனகராஜ் என்ற இளைஞரை கோவை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கனகராஜ் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் படித்த பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். கல்லூரி படிப்பை முடித்துக்கொண்டு இளம் பெண் கோவையில் தனியாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். கனகராஜ் அதே பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை செய்து வந்து கொண்டிருக்கின்றார்.
தன்னுடன் படித்த பெண்ணை ஒருதலை காதலித்துள்ளார் கனகராஜ். தினமும் அந்த பெண்ணிடம் திருமணம் செய்ய வற்புறுத்தி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
பெண்ணின் வீட்டார் பலமுறை எச்சரித்தும் மீண்டும் தொடர்ந்து திருமணம் செய்ய வற்புறுத்தி தொல்லை கொடுத்து வந்ததையடுத்து, அந்த இளம்பெண் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் கனகராஜை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் நடந்தவை உண்மை என தெரிய வந்ததை அடுத்து இளம் பெண்ணுக்கு திருமண தொல்லை கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Be First to Comment