கோவை பீளமேடு அருகே உள்ள இஸ்கான் திருக்கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார் ஸ்ரீ கிருஷ்ணன்.
இங்குள்ள கிருஷ்ண பக்தர்கள் இறைவனை போற்றும் விதமாக பஜனைகளை பாடியும், வட்டமடித்து நடனங்கள் ஆடியும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர்.
பக்தர்கள் இந்த நிகழ்ச்சிகளை வீடுகளில் இருந்து இணையவழியில் நேரடியாக இறைவனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணபிரான் நடுனிசியில் பிறந்ததாக நம்பப்படுவதால் மாலை நேரங்களில் பல்வேறு இடங்களிலும் குழந்தைகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணன் வேடம் அணிந்தும் பெண் குழந்தைகளுக்கு ராதையின் வேடம் அணிந்தும் வீதிகளில் வலம்வந்து மக்கள் சிறபாக கொண்டாடுவது வழக்கம்.
ஸ்ரீ கிருஷ்ண ஹெயந்தி அன்று வீட்டில் உள்ள குழந்தைகளை
கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு, குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்பட்டு வழிபடுவது வழக்கம்.
Be First to Comment