கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையுடன் தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அபாயகரமாக அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கோவையிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் போதுமான ஆக்சிஜன் வசதி இல்லாத காரணத்தினால் உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்து வருகிறது.உயிரழப்புகளை தடுப்பதற்கு தற்போது ஆக்சிஜன் செறிவூட்டிகளின் தேவை பெரிதும் தேவைப்படுகிறது. ஆக்சிஜன் செறிவூட்டிகள், சுற்றுப்புற காற்றை உள்ளிழுத்து, நைட்ரஜனை வடிகட்டி, ஆக்சிஜனின் செறிவுத்தன்மையை அதிகப்படுத்தும்.ஆக்சிஜன் செறிவூட்டிகள், 24 மணி நேரமும் இயங்கும் தன்மை என்பதால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்,கோவை இஎஸ்ஐ மருத்துவமனையின் நோயாளிகளின் சிரமத்தை உணர்ந்து கோவையை சேர்ந்த ராஜஸ்தான் கோவிட் சென்டர் சார்பில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு 7 லட்சம் மதிப்புள்ள 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ இடர்ஜெண்ட் கோத்தரி,பாபுலால் பக்ரேஜா,கைலாஷ் ஜெயின் மற்றும் ராஜஸ்தான் உறுப்பினர்களை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்
Be First to Comment