சுசி ஈமு என்ற பெயரில் பல கோடி மோசடி செய்த நிறுவனத்தின் சொத்துக்களை உடனடியாக ஏலம் விட்டு அதன் தொகையை முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க டான்பிட் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த குருசாமி, ‘சுசி ஈமு பார்ம்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். ஈமு கோழி வளர்ப்பதற்கு வாடிக்கையாளர்களிடம், 200 கோடி ரூபாய் டெபாசிட் பெற்று, பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக குருசாமியும், அவரது மனைவியும், 2015ல் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை முதலீட்டாளர் பாதுகாப்பு கோர்ட்டில் (டேன்பிட்) நடந்து வருகிறது. இந்த நிலையில் பெருந்துறையில் உள்ள சுசி ஈமு நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க அனுமதி வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு வக்கீல் மனு அளித்தார்.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி ரவி, பெருந்துறையில் உள்ள சுசி ஈமு சொத்துக்களை பொது ஏலம்விட அனுமதி அளித்தார்.
Be First to Comment