கங்கா 50,000 ரூபாய், யமுனா 25,000 ரூபாய், மகாநதி 10,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், பிரம்மபுத்ரா 2,500 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக, காவிரி 500 ரூபாய்.
இதெல்லாம் சிவராத்திரி ஈஷா யோகா விழாவிற்கான அந்த அந்த காலரிக்கான பெயரும் அதன் இருக்கை கட்டணமும் தான்..
இதுல கூட காவிரி கேவலமாகி கடைசில..
50,000 ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் என்ன வித்தியாசம் தெரியுமா, ’’50,000 ரூபாய்க்கு ஆதியோகிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்கலாம், 20,000 ரூபாய் கொடுத்தால் கொஞ்சம் பின்னால், 10,000 ரூபாய்க்கு அதற்கும் பின்னால், 5,000 ரூபாய் கொடுத்தால் எல்.சி.டி. ஸ்க்ரீனுக்கு முன்னால், 500 கொடுத்தால், தூரத்தில் இருந்து பார்க்கலாம்.
அப்போ அந்த இலவச அனுமதி ?! அதையும் தாண்டி தடுப்பு கட்டைகளுக்கு பின்னே, தரையில் உட்காந்து பார்க்கலாம், கேட்கலாம்.

நமது ஊரில் அதிகம் உள்ளவை காவல் தெய்வங்கள் மற்றும் குலதெய்வங்கள்தான். அங்கு இருக்கும் பூசாரிகளுக்கு காணிக்கைகளை அதிகம் நம் மக்கள் கொடுப்பதில்லை. ஆனால் ஈஷா போன்ற இடத்தில் பணத்தை கொட்டி கொடுத்து ஆன்மிகம் வளர்க்கும் நபர்கள் இருப்பதால்தான் அதிகப்படியான விலைக்கு இந்த இருக்கைகள் விற்கப்படுகின்றன.
இது யார் தவறு. பக்தர்கள்தான் முடிவு செய்யனும்.

Be First to Comment