கோவையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் இலங்கை நிவாரண நிதிக்கு உண்டியலில் சேமித்த பணத்தை கொடுத்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹசான் பாஷா. இவருக்கு ஹனா பாத்திமா மற்றும் ஹர்பான் பாஷா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் குனியமுத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

ஹனா பாத்திமா மற்றும் ஹர்பான் பாஷா ஆகிய இருவரும் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த இலங்கை நிவாரண நிதிக்கு உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து கொடுத்துள்ளனர்.
உண்டியலில் உள்ள பணத்தை எண்ணிப்பார்க்கவில்லை என்றும், ஆண்டுதோறும் ரம்ஜான் தினத்தில் இது போன்று பலருக்கு நிதி உதவி செய்து வருவதாகவும் குழந்தைகள் தெரிவித்தனர்
Be First to Comment