குறிச்சி, காந்திநகரிலுள்ள முதல் தெருவில் காளை மாடு ஒன்று உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக குறிச்சி டைம்ஸ் அலுவலகத்திற்கு பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக தகவல் கொடுத்தனர்.

உடனடியாக நாம் அந்த இடத்திற்கு சென்றோம். செய்தி அறிந்து அங்கு செல்கையில் முன்னாள் நகர் மன்ற தலைவர் குறிச்சி பிரபாகரன், கொசிமா லோகநாதன், வானவில் கனகராஜ் மற்றும் பெயர் தெரியாத அப்பகுதியில் உள்ள சிலர் காளையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்தனர். கடந்த இரண்டு நாட்களாக மாடு கேட்பாரற்று கிடந்துள்ளது. காளையை இந்த இரவு நேரத்தில் சிகிச்சைக்கு அழைத்து செல்ல என்ன வழி என்று யோசித்த போது, முன்னாள் குறிச்சி நகராட்சி தலைவர் பிரபாகரன் இதனை கோசாலையில் சென்று சேர்ந்து விடலாம் என ஆலோசனை கூறினார். அதற்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறினார்.

அவர், சமூக ஆர்வலர் முகமது சஃபியினை தொடர்பு கொண்டு உடனடியாக அவரது டெம்போ வாகனத்தை அந்த இடத்திற்கு வரச் செய்தார். இதை கேட்டதும் சமூக ஆர்வலர் முகமது சஃபியும் அந்த இடத்திற்கு உடனடியாக வந்தார். பாதிக்கப்பட்ட மாட்டினை அங்கு இருந்தவர்கள் வாகனத்தில் ஏற்றினர்.


மனிதாபிமானத்தோடு மாட்டின் உயிரை காப்பதற்கு முயற்சி எடுத்த முன்னாள் நகர் மன்ற தலைவர் குறிச்சி பிரபாகரன், கொசிமா லோகநாதன், வானவில் கனகராஜ், சமூக ஆர்வலர் முகமது சஃபி மற்றும் பெயர் தெரியாத நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறோம்.

Be First to Comment