சேலத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் கேரளா கண்ணூர் சென்று, கோயமுத்தூர் திரும்பியிருக்கின்றார். கோயமுத்தூரில் இறங்க வேண்டிய நபர் உறங்கிவிட்டார். உடனடியாக அவர் விழித்துக்கொண்டு ஓடும் ரயிலிலிருந்து தாவினார். அப்போது நிலை தடுமாறி, தண்டவாளத்துக்கு அடியில் தடுமாறி விழுந்தார். அப்போது பணியில் ரோந்து சென்ற ரெயில்வே இருப்பு பாதை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமை காவலர் (203) திரு ரமேஷ், காவலர் (1025) மாரிமுத்து, மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் திரு அருண்ஜித், பெண் தலைமை காவலர் மினி, ஆகியோர் தண்டவாளத்தில் விழுந்த நபரான சேலத்தை சேர்ந்த சிவகுமாரை கண் இமைக்கும் நேரத்தில் அசம்பாவிதத்தில் இருந்து காப்பாற்றினர்.

இதனால் சிவகுமார் உயிர்தப்பினார். கோவை ரயில் நிலைய நடைமேடையில், 23 .15 மணிக்கு கோவை ரயில் நிலைய நடை மேடை எண் 3 -ல், வண்டி எண் 16528 கண்ணூரில் இருந்து எஸ்வந்த்பூர் செல்லும் ரயில் வண்டியில் விழுந்த நபர் இருப்பு பாதை போலிசாரால் காப்பாற்றப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கண் இமைக்கும் நேரத்தில் விபத்துக்குள்ளான நபரை லாவகமாக காப்பாற்றிய கோயமுத்தூர் ரயில்வே காவலர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
Be First to Comment