இன்று உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஒருநாள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் தேன் வகைகள் ,தேனீ வளர்ப்பு முறை விளக்கம், தேன் எடுக்கும் கருவிகள், தேன் மெழுகு சிலைகள் ஆகியவை வைக்கப்படுள்ளன. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள தேன் எடுக்கும் கருவிகள் குறித்தும், தேன் வளர்ப்பு முறை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் தேனை சுவைத்தார்.

இந்த கண்காட்சியில் பொதுமக்களுக்கு தேனீ வளர்ப்பு முறை குறித்தும் இந்த கருவிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும் தேன் மற்றும் தேன் மெழுகு சிலைகள் விற்பனையும் செய்யப்படுகின்றன.
Be First to Comment