வனங்களின் உள்ள விலங்குகளில் முக்கிய பங்கு வகிப்பதும், காட்டுவளங்களின் பாதுகாவலனாகவும்,இருப்பது யானை.உலக நாடுகளில் அதிக யானைகள் உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் தற்போது யானைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவது கூடுதல் வேதனை. குறிப்பாக, நம் தமிழகத்தில் மேற்கு மலை தொடர்ச்சி ஒட்டி வரும் நீலகிரி,கோவை போன்ற மாவட்டங்களின் வனப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் யானைகள் வாழ்கின்றன. பிரம்மாண்ட உடலமைப்புடன் ஒய்யாரமாக ஆடி அசைத்து செல்லும் யானையின் அழகை காண விரும்பாதவர்களே இல்லை எனலாம். இந்நிலையில் உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் புகுவதும் இதனால் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே மோதல்கள் உருவாவதும் தற்போது அதிகரித்து வருகின்றன. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் காட்டு யானைகள் தாக்கி 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில்,சுற்றுலா தளங்கள்,போன்றவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மட்டுமே காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் படையெடுக்க பிரதான காரணமாய் அமைந்துவிடுகிறது.மேலும் சில நேரங்களில் காடுகளில் ஏற்படும் வறட்சியால் தண்ணீர் மற்றும் உணவு தேடியும் யானைகள் மக்கள் கிராம பகுதிகளுக்கும் வரும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. அதேவேளையில் மனிதர்களின் அலட்சிய செயலால் காட்டு யானைகள் பலியாவதும் தொடர்கதையாகி வருவதாகவும் வன உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி யானைகள் வழித்தடத்தை மீட்டெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய அதிரடி தீர்ப்பை அடுத்து கோவை,நீலகிரி போன்ற சில பகுதிகளில், யானைகள் வழித்தடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.இதேபோன்று மற்ற பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி யானைகள் வழித்தடத்தை மீட்டெடுத்தால்,மட்டுமே இனி வரும் காலங்களில் யானைகளால் உயிரிழக்கும் மனிதர்களை காப்பதோடு,அதே நேரத்தில் யானைகள் உயிரிழப்பையும் தடுக்க முடியும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உலக யானைகள் தினம் இன்று கொண்டாப்படுகிறது
by
Tags:
Leave a Reply